கடலில் மூழ்கிய லெமூரியா தொடக்ககால திராவிட இனம் வாழ்ந்த நிலப்பரப்பு என்கிறார் சார்லஸ் மேக்லீன் என்ற பிரிட்டிஷ் அதிகாரி.
ராமாநுஜர் ‘வைணவத்தில் ஜாதி இல்லை' என்று ஓங்கி உரைத்தார். தாழ்த்தப்பட்ட மக்களை 'திருக்குலத்தார்' என்றழைத்தார். காந்தியடிகளும் அவர்களை ஹரிஜன் என்றார்.
களப்பிரர் ஆட்சிக்காலத்தில்தான் தமிழ்க் காவியங்கள் உருவாகியுள்ளன. இவர்கள் ஆட்சிக்காலத்தை தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் என்று கூறுகின்றனர் தமிழறிஞர்கள்.
ஐரோப்பியர் வருகைக்குப் பின் கிருத்துவ மதத்தை பரப்பும் பணியில் ஈடுபட்ட ஐரோப்பிய கிருத்துவர்கள் சாதிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பர்களாக விளங்கினர்; தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும் பங்காற்றியுள்ளனர்.
பிராமணர்களுக்குள்ளேயும் சென்னையில் எழும்பூர் பிரிவு என்றும் மயிலாப்பூர் பிரிவு என்றும் கோஷ்டிகள் இருந்தன. கடலூரில் பிறந்த அஞ்சலை அம்மாள் காந்தியால் 'தென்னிந்தியாவின் ஜான்சி ராணி' என்றழைக்கப்பட்டார்.
சுதந்திரம் அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்கள் கழித்துதான் இரு நாடுகளுக்கான எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டன. ஒரே நாட்டில் ஒரே ஊரில் இருந்த மக்கள் ஒரே நாளில் இரு நாட்டைச் சேர்ந்தவர்களாயினர்.
Be the first to rate this book.