கவி அலறியின் நீண்டகாலச் சுவைஞன் நான். மொழியின் அழகையும் தமிழின் ஆழமான சொற்கிடங்குகளில் ஒளிந்திருக்கும் நளினமிகு சொற்களை இயல்பாகத் தன் கவிதைகளில் தூவி விடுகிற மென் கவி அவர். இந்த தொகுப்பில் உள்ள அவரது கவிதைகள் புதுமையை அவாவுபவை. வசனத்தின் வலிமையைப் பெற்றுச் சிறப்பவைதான் நவீன கவிதைகள் என்ற பழைய கோட்பாட்டுச் சட்டகத்தை ஒத்திசையும் சொற்களோடும் ஒரு புன்சிரிப்போடு மீறுபவை. அழகியவை. செயற்கை நுண்ணறிவு நம்மை ஆளுகிறபோது நமக்கு கிடைக்கும் மானுடத்துக்கு அப்பாற்பட்ட புது உலகுக்கு, கவிதையின் மறுமொழி என்ன எனும் கேள்விக்குப் பதில் இத்தொகுதியில் ஆங்காங்கே கிடைக்கிறது.
-சேரன்
Be the first to rate this book.