புதிதாகப் பிறந்த குழந்தையைப் பார்க்கப் போகும்போது, குழந்தைக்குப் புத்தாடையும், தாய்க்கு பழங்கள் போன்றவற்றையும் வாங்கிச் செல்வோம். இனி, இவள்பாரதி" எழுதியுள்ள இந்த 'குழந்தைகள் சூழ் உலகு நூலையும் வாங்கிச் சென்று தரலாம்.
குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிவது எப்படி? வெற்றி பெற வேண்டும் என்ற வெறியுடன் வளர்க்கலாமா? குழந்தைகளுக்குச் சுதந்திரம் அளித்து வளர்ப்பது சரியா? இரண்டாவது குழந்தை பிறக்கும்போது, முதல் குழந்தையை எப்படி அணுக வேண்டும்? டெக்னாலஜி விஷயங்களில் குழந்தைகள் ஆர்வமாக இருப்பது நல்லதா? அவர்கள் ஏன் பொய் சொல்கிறார்கள்? வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்துவதன் அத்யாவசியம்? இதுபோல் இன்னும் ஏராளமான சந்தேகங்களுக்கான விளக்கங்களும், ஆலோசனைகளும் இந்தப் புத்தகத்தில் கொட்டிக் கிடக்கின்றன. மருத்துவர்களின் ஆலோசனைகளும் சில தாய்மார்களின் அனுபவங்களும் இந்த நூலை உயிர்ப்புள்ளதாக்குகிறது.
-பெ. கருணாகரன், பத்திரிகையாளர்
Be the first to rate this book.