குழந்தைகளிடம் அன்பாக இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள் ஆனால் மாண்டிசோரி அம்மையார் மட்டுமே குழந்தைகளை மதிப்புடன் நடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். உரிய மதிப்பு கொடுக்கும்போது அவர்களிடம் சுயமதிப்பு உருவாகிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. குழந்தைகளைப் பற்றிய நமது புரிதல் எவ்வளவு அபத்தமானது என்பதை இந்த நூலைப் படிக்கும் எவருக்கும் புரிந்துவிடும். காலம் காலமாக அதிகாரம் செலுத்துவதையே பெருமையாக கருதிக் கொண்டிருக்கும் தமது அமைப்பில் மென்தளிர்களாக மாட்டிக்கொண்டு தகங்கிக் கொண்டிருக்கிறார்கள் குழந்தைகள், அவர்களை மீட்டெடுக்கும் ஓர் இயக்கம் என்றே இந்தக் கல்விமுறையை அடையாளம் காணலாம். குழந்தைமை என்ற புத்தகத்தில் மேரியாமாண்டி சோரி சொல்லியிருக்கும் கருத்துக்களுக்கு வடிவம் கொடுத்தால் எப்படி இருக்கும்? எங்கள் அனுபவத்தில் மாநகராட்சிப் பள்ளிகளின் மழலையர் வகுப்பறைக் காட்சிகளே அதற்கு சாட்சியாக நிற்கின்றன. குழந்தைமை என்ற இந்த நூல் தொடர்ந்து பிரசுரிக்கப்பட்டுக் கொண்டிருப்பதும், வாசிக்கப்பட்டுக் கொண்டிருப்பதும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.
-கே.பாரதி
Be the first to rate this book.