ஆயிஷா இரா.நடராசன், வேதியியல், இயற்பியல், உயிரியல் ஆகிய மூன்று துறைகளில் ’10 எளியச் சோதனைகள்’ என்ற நூல் வரிசை எழுதி இருக்கிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து, புக்ஸ் ஃபார் சில்ட்ரன் இப்புத்தகங்களை வெளியிட்டுள்ளது.
கற்றலில் ஆர்வமுடைய உங்கள் குழந்தைக்கு இந்தமாதிரியான நூல்களை வாங்கிக்கொண்டுங்கள். இப்படியான சோதனைகளுக்கு குழந்தைகளை ஊக்குவியுங்கள். 10 வயதுடைய குழந்தையும் இச்சோதனைகளைச் செய்துபார்க்கும்படி எளிமையாக எழுதப்பட்டுள்ள நூல் இது. யாருக்குத்தெரியும் நாளை, உங்கள் பிள்ளையும் ஏதாவது ஒரு துறையில் ஆர்வம் ஏற்பட இச்சோதனைகள் துணை புரியலாம்.
மூன்றிலுமாக சேர்த்து மொத்தம் 30 சோதனைகள். செய்முறைப் படங்களுடன் உள்ளது.
இச்சோதனைகளின் பின்னால் இருக்கும் அறிவியல் விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது.
Be the first to rate this book.