இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள், எண்ணற்ற தடைகளை மீறி எழுதப்பட்டவை. குவண்டனமா வளைகுடாவில் எந்த நியாயமான விசாரணையுமின்றி தனிமைக் கொட்டடியில் சிறைவைக்கப்பட்டுள்ளவர்கள்; சித்ரவதைக்குள்ளாக்கப்பட்டுள்ளவர்கள். அவர்களில் சிலர் கவிதைகளில் அடைக்கலம் தேடியுள்ளனர். இந்தச் சிறு தொகுப்பின்வழி அவர்களின் குரல்களைக் கேட்கிறோம். அவர்களது ஆழமான அந்தரங்க உணர்வுகளை அறிகிறோம். இவர்களின் கவிதைகள் விஷேசமானவை, மானுட வேட்கையின் ஆற்றல்மிக்க சாசனம் அவை.
Be the first to rate this book.