இந்தக் கதையில் வரும் குட்டிப்பாப்பா, தன்னைச் சுற்றிலும் உள்ள இயற்கையை உலகத்தைப் புரிந்து கொள்ள முயல்கிறாள். அவளுடைய குட்டி மூளையில் ஏராளமான கேள்விகள் முளைத்துக் கொண்டேயிருக் கின்றன.அவற்றுக்கான பதில்களை அவள் எல்லாரிடமும் கேட்கிறாள் அவர்களுடைய பதில்களினால் அவள் திருப்தியடைவதில்லை. மீண்டும் மீண்டும் கேட்டுத் தெளிவு பெறுகிறாள். எந்த பதில் சரியானது என்று அவளுக்குத் தோன்றுகிறதோ அதை மட்டுமே அவள் ஏற்றுக்கொள்கிறாள். அதுவரை அவள் கேள்விகள் கேட்டுக் கொண்டேயிருக்கிறாள். இந்தக் குட்டிப் பாப்பாவின் அற்புத உலகத்துக்குள் உங்கள் குழந்தையை யும் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் குழந்தைகளும் கேள்விகள் கேட்பார்கள். நாம் அனைவரும் சேர்ந்து பதில்களைத் தேடுவோம்.
உதயசங்கர் (1960) நாற்பது ஆண்டுகளாக சிறுகதை, கவிதை, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு, கட்டுரை, ஆகிய வகைமைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக சிறார் இலக்கியத்தில் நாவல், சிறுகதை, பாடல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று எல்லா வகைமைகளிலும் தொடர்ந்து பங்களித்து வருகிறார். விகடன் விருது. தமிழ்ப் பேராயம் விருது, தமுஎகச விருது. சுலை இலக்கியப் பெருமன்ற விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
Be the first to rate this book.