இத்தொகுப்பிலிருக்கும் ஒவ்வொரு கதையிலும் ஒரு சாமானியத் தத்துவம் பொதிந்துள்ளது. ரவி என்னிடம் இந்தத் திரட்டைத் தந்தபோது நான் வியப்புடன் கேட்டேன். என்ன ரவி நீங்க கதைகூட எழுதுவீங்களா என்று. படித்து முடித்தபிறகு கேட்கிறேன். ஏன் ரவி இத்தனை நாள் கதை எழுதாமல் இருந்தீர்கள் என்று. இது முடிவல்ல ஆரம்பம். உங்களால் நிறைய சாதிக்க முடியும். தொடருங்கள். மனதார்ந்த வாழ்த்துகள். -உஷா சுப்ரமணியன் என்னைப் பொறுத்தவரை, ஒரு கதை என்பது நேரான நெடுஞ்சாலையாக இருக்கக்கூடாது. வளைந்து, நெளிந்து செல்லும் நீரோடையாக இருக்கவேண்டும். 'சட்'டென்று ஒரு பள்ளம் வரும். விழும்: மீண்டும் ஒரு மேடு வரும். எழும். ஓரிடத்தில் திரும்பிப் பாதை மாறும்... இந்தத் தன்மை இவரது கதைகளில் இருப்பதைத் தான் அதிசயம் என்று சொன்னேன்.
-ராஜன் சர்மா
Be the first to rate this book.