பேசுவதற்கு ஒருபுறமிருக்கட்டும். சிந்திப்பதற்கே அவகாசம் தரப்படாத பிறவிகள் நாங்கள். குதிரைக்குக் கடிவாளம் போட்டது போல எதைப் பார்க்கலாம். எதுவரை பயணிக்கலாம். எப்படி வாழத் தகுதி உள்ளது என்று எங்கள் மரபணுவில் கலக்கும் அளவுக்கு பொடித்துச் சேர்த்தாயிற்று. அவற்றை உடைத்தெறிந்து திறந்த கண்களுக்கு சுதந்திரத்தின் வெளிச்சம் பழக சில காலமாகிறது.
பெண் உடலை பலகாலமாக ஆண் வர்ணித்தபோது ரசித்த சமூகம், பெண் தன்னுடலைப் பற்றி பேச ஆரம்பித்ததும் அதிர்ச்சிக்குள்ளாகிப் போனது. அந்த அதிர்ச்சி இந்த நூலில் இன்னும் அதிகமாகப் போகிறது என்றெண்ணும்போது, நான் 'மாயா பஜார்' திரைப்படத்தில் எஸ்.வி.ரங்காராவ் சாவித்திரி ரூபத்தில் சிரிப்பதுபோல இடுப்பில் கைகள் வைத்து வாய்விட்டுச் சிரித்துத் தள்ளுகிறேன்!
-ரோகிணி
இருபதாண்டுகளாக ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். பெண்ணியம், சாதி ஒழிப்பு குறித்துத் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார். 'இப்போதும் வசந்தி பேக்கரியில் பெண்கள் காணப்படுவதில்லை' 'குத்தமா சொல்லல குணமாவே சொல்றோம்' நூல்களின் ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர். ஜெயகாந்தனின் 11 சிறுகதைகள் மற்றும் கீதா இளங்கோவனின் 'துப்பட்டா போடுங்க தோழி' ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.
'ஹெர் ஸ்டோரிஸ்' வலைத்தளத்தில் 'ஆண்கள் நலம்' எனும் தலைப்பில் இவர் எழுதி வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற தொடரின் தொகுப்பே இந்நூல்.
Be the first to rate this book.