உங்கள் கையிலுள்ள இந்தச் சிறு நாவலை பிரெஞ்சு மொழி இலக்கியத்தில் ஒரு சிகரம் என்று சொல்ல வேண்டும். ஏன், எப்படி என்று அலசிப் பார்த்துக் கொண்டிருப்பதை விட, நாவலைப் படித்துப் படித்து அனுபவிக்க வேண்டியது மிகவும் அவசியம்.
நாவல் என்றால் என்னென்ன இலக்கணங்கள் அவசியம் என்று பண்டிதர்கள் சொல்லுகிறார்களோ அத்தனை இலக்கணங்களையும் மீறி ஒரு அற்புதமான நாவலை நமக்குச் சிருஷ்டித்துத் தந்திருக்கிறார் ஆந்த்ரே ழீடு, நாட் குறிப்புகள், கவிதை, இலக்கிய சர்ச்சைகள் எல்லாவற்றையும் புகுத்தி இலக்கணப் பண்டிதர்களைத் திணற அடித்து விட்டார் அவர்.
பிரெஞ்சு நாவல் உலகத்திலே உருவத்துக்கும் நடைக்கும் சிறப்பான முக்கியத்துவம் உண்டு. உருவத்திலும் நடையிலும் குறுகிய வழி எனும் இந்நாவல் மிகவும் சிறப்பானது. ஒரு எளிய காதல் கதையை பல கோணங்களில் நின்று நிறுத்தி அழகாக நடத்தி நமக்குத் தந்திருக்கிறார் ஆசிரியர். ஸ்டெந்தால், பால்ஸாக், ஃப்ளோபேர், முதலிய மேதைகளின் நாவல்களுக்கு ஈடானதொரு நாவலாக அமைந்து விட்டது இது. தமிழ் மொழிபெயர்ப்பு வெளிவருவதென்பது தமிழர்கள் செய்த பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும்.
Be the first to rate this book.