‘சொல் வசப்பட்டவர் சுசித்ரா மாரன்’. இவைதான் இந்தக் கவிதைகளைப் படிக்குந்தோறும் தோன்றிக்கொண்டேயிருந்த வார்த்தைகள். அவருக்குத் திணையும் மொழியும் யாப்பும் இலக்கணமும் மிக அறிமுகமானவை மட்டுமல்ல; அவர் (சு)வாசிப்போடு கலந்துவிட்ட ஒன்றாகவே உள்ளன. தூரத்தில் வருகிறபோதே பூத்தூவல் தூவி நனைக்கிற அருளிச்சாரல் போல, அதன் குணம் காட்டத் தொடங்கிவிடுகிறது அவரது கவித்துவம். கவிதைகளைப் படிக்குந்தோறும் படித்து முடிக்கும் போதும் எழுதிப் பழகிய மனத்துக்குள் ஊற்றெடுக்கின்றன கவித்துவமான வரிகள்.
சுசித்ராவின் கவிதைகள், கண்ணாடியில் படர்வது தெரியாமல் படரும் பனி போன்றவை. ஒரு கவிதை வானவில் சமைவது போல அமைய வேண்டும். அதை நிறுவுகிற விதமாக நெருநல் நின்று நாளை மறைகிறவையல்லாத கவிதைகளை எழுதிக் காண்பித்திருக்கிறார் சுசித்ரா.
கலாப்ரியா
Be the first to rate this book.