மகிழ்ச்சி எனும் உச்சகட்டத் தளத்திற்குள் நுழைய நீங்கள் ஒரு துறவியாக இருக்க வேண்டிய அவசியமில்லை!ஆம், அது உண்மைதான்.
குண்டலினி சொல்லப்படாத ஒரு கதை என்ற இந்நூலில், இமாலயத் துறவியான ஓம் சுவாமி, உங்களுடைய முதன்மை ஆற்றலும் தேவியின் உருவமற்ற அம்சமுமான குண்டலினியின் புதிரான கதையைத் திரைவிலக்கிக் காட்டுகிறார்.
இந்த ஆற்றலின் மூலாதாரத்தை விழிப்பூட்டுவதற்கான நடைமுறைச் சாத்தியம் கொண்ட நடவடிக்கைகள் உட்பட, குண்டலினி மற்றும் அதன் ஏழு சக்கரங்களின் உண்மையான அர்த்தத்தையும் பூடகமான அர்த்தத்தையும் அவர் தன்னுடைய வழக்கமான நகைச்சுவையான பாணியில் விளக்குகிறார். இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள வாழ்க்கைச் சம்பவங்கள், பல வருடங்கள் தீவிரமாக தியானம் செய்ததிலிருந்து அவருக்குக் கிடைத்துள்ள அனுபவங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன.
குண்டலினி உருவான கதையில் தொடங்கி இந்த நவீன யுகத்தில் ஓம் சுவாமி அடைந்துள்ள ஞானோதயம்வரை, இதுவரை எந்தவோர் ஆன்மீக நூலும் விவரித்திருக்காத முறையில் எடுத்துரைக்கும் இப்பயணத்தில் மூழ்கி முத்தெடுங்கள்.
Be the first to rate this book.