சிறந்த குடிகாரரான மண்ட்டோ, டெல்லியில் கிர்ஷன் சந்தரைத் தேடிச் சென்று பார்க்கிறார். எந்த ‘கெட்ட’ பழக்கமும் இல்லாத கிர்ஷன், மண்ட்டோவின் உரையாடலில் மயங்கி, சோலன் விஸ்கியை அருந்துகிறார். டெல்ஹியை விட்டு விட்டு பாம்பே நகரத்திற்கு வருமாறு, சந்தரை மண்ட்டோ வேண்டுகிறார். அடுத்தநாள் காலை, போதை தெளிந்த சந்தர் சொல்கிறார் “பம்பாய் நாசமாகப் போக. கொஞ்சம் விஸ்கியை அனுப்புங்கள்”
அரசியல், இலக்கியம், பொருளாதாரம், திரைப்படம், பண்பாடு எந்த விஷயமானாலும் தீவிரமும் எள்ளலும் கலந்து கேள்விகேட்பதுடன், நமக்குள் உரையாட வைப்பவர்தான் கிருஷ்ண சந்தர்.
Be the first to rate this book.