அடுத்து எடுக்கவிருந்த மினி பஸ் காட்சியில் புதிதாக மொட்டை அடித்த ஒரு மூதாட்டி பஸ்ஸில் அமர்ந்தபடி வருமாறு கதையில் எழுதப்பட்டிருந்தது. அதற்கான ஆட்களை பல நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை. நமக்கு தான் இருக்கவே இருக்கிறாளே பூமாலை கிழவி. அவளிடம் போய் விஷயத்தைச் சொல்ல... அவள் சற்றும் யோசிக்காமல் தன் தோழியான வயதான இன்னொரு கீழவியை அழைத்துப் பேசினாள், அந்த தோழி கிழவியும் நடிப்பதற்கு ஒத்துக்கொள்ள..எங்களுக்கு நிம்மதியாக இருந்தது. ஆனால் கிழவி மொட்டையடித்திருக்க வேண்டுமே அதற்கு என்ன செய்வது..? எங்கு செல்வது...? என நாங்கள் குழம்பிக்கொண்டிருக்க... அப்போதுதான் சற்றும் எதிர்பார்க்காத ஒன்று அங்கு நடந்தது இரண்டு மூன்று பெண்கள் ஒன்று சேர்ந்து, அக்கிழவியை திண்ணையில் அமர வைத்து அங்கேயே மொட்டையடிக்கத் தொடங்கினா, நாங்கள் அதிர்ச்சியில் செய்வதறியாமல் நடப்பவற்றை வியப்பாக பார்த்துக்கொண்டிருந்தோம். தன் தோழி சொல்கிறாள் என்பதற்காக சற்றும் யோசிக்காமல் உடனே மொட்டை அடித்துக்கொள்ளும் மனிதரை நாம் எங்கு காண முடியும் சொல்லுங்கள். அவ்வளவு வெள்ளந்தியான மக்கள் எங்களைச் சுற்றி நின்றுகொண்டிருந்தார்கள்.
நடித்துக்கொண்டிருந்தது என்னவோ நாங்கள் மட்டும்.
Be the first to rate this book.