கண்ணகிக்கு நிகராகப் போற்றப்பட வேண்டிய ஒரு கற்புக்கரசி, ஏனோ யார் கண்ணிலும் படாமல் கம்பம் பள்ளத்தாக்கின் பச்சை கூமாச்சி மலையின் அடிவாரத்தில் புதைந்து கிடக்கிறாள். அவளைத் தோண்டியெடுத்து இப்புவிக்கு அறிமுகப்படுத்த இயற்றப்பட்ட முயற்சியே இந்த நாவல்.
மதுரையில் கி.பி 13ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த குலசேகரப் பாண்டியனின் மரணத்திற்கும் கூத்தனாச்சிக்கும் ஒரு தொடர்பு உள்ளது போல கதையை அமைத்துள்ளேன். பல தலைமுறைகளாக சொல்லப்பட்டு வரும் செவிவழிக் கதையின் கரு சிதையாமல் கதைக்களம் கூத்தனாச்சியைப் அமைத்துள்ளேன். படித்த ஒவ்வொருவரும் அவளைப் போற்றுவார்கள் என்பது உறுதி.
கண்ணகி போற்றப்படும் அளவுக்கு இனி கூத்தனாச்சியும் போற்றப்படுவாள் என்று நம்புகிறேன்.
Be the first to rate this book.