மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தின் அடித்தளங்களில் ஒன்றான உபரி மதிப்பு கோட்பாட்டை மார்க்ஸ் முதன்முதலாக, ’கூலி விலை லாபம்’ என்ற இந்நூலில் எடுத்துக் கூறினார். இது மட்டுமல்லாமல், அதை மிக எளிமையாக எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எடுத்துக் கூறியுள்ளார். இந்த நூல்தான் முதலாம் அகிலத்தின் பதாகையில் நியாயமான வேலை நேரத்திற்கு நியாயமான கூலி என்ற முழக்கத்திற்குப் பதிலாக, *கூலி அடிமைத்தனம் ஒழிக” என்ற முழக்கத்தைப் பொறித்தது.
Be the first to rate this book.