உச்சிக் கோவில்
மலைக்கோவில் மணியின் வெண்கலச்
சொற்கள்
பதட்டமாக ஒலித்தன
கருவறைக்குள்
என்ன விபரீதம்
என்று காணச் செல்வோம் வா
தோழனே என்றான்
உச்சிக்கோவிலை
நெருங்கிக் கொண்டிருந்தோம்
இதுவரை எங்கள்
பாதையில் உருண்டோடி
வந்த முனகல்கள்
நின்று விட்டன
எல்லாம் சுபமாக
முடிந்தது நண்பா வா
குடிலுக்கு திரும்பலாம் என்றேன்.
Be the first to rate this book.