உமையவன் சொந்த ஊர், சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ள கெம்பநாயக்கன்பாளையம் எனும் கிராமம், தனியார் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் இவர் தொடர்ந்து பல ஆண்டுகளாக சிறார் படைப்புத்தளத்தில் இயங்கி வருகிறார். சிறுவர்களுக்கான அறிவியல், சூழலியல், புனைவு என பல தளங்களில் கதைகளை எழுதி வருகிறார். கவிதை, ஹைக்கூ, கட்டுரை, ஆய்வுநூல்கள் என இருபதிற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். தமிழக அரசு விருது, கம்போடியா அரசு விருது, திருப்பூர் இலக்கிய விருது உள்ளிட்டப் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரின் சிறார் நூல்கள் ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட இவரது "பறக்கும் யானையும், பேசும் பூக்களும்" நூல் நல்லி - திசை எட்டும் விருதினையும் பெற்றுள்ளது.
யானைகளை மையப்படுத்திய இந்தத் தொகுப்பு முழுவதும் குழந்தைகளுக்கான எழுத்தாக அமைவது சிறப்பு. பாராட்டுக்குரியது. விதவிதமான யானைகள், வனம், வனவிலங்குகள், இயற்கை, மனிதர்கள் என விரிகின்றன கதைகள். இவற்றில் ஒன்று போல் மற்றொன்று இல்லை. போலச் செய்தல் இல்லை. முக்கியமாக கதையின் மூலம் அறிவுரை இல்லை. இயல்பாக இயங்கும் பிரபஞ்சம். அதற்குள் சிறகு கட்டிப்பறக்கும் குழந்தைகளின் குதூகலக் கற்பனைகள், இத்தொகுப்பு உண்மையிலேயே பெருமகிழ்ச்சித் தருகிறது. குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் இனிய அனுபவமாக அமையும். இந்தத் தொகுப்பின் நோக்கம் சிதையாமல் சிறுவர் இலக்கியக் கதைகளின் போக்கை உணர்த்தும் விதத்தில் கதைகளைத் தேர்வு செய்திருப்பது சிறப்பு. இக்கதைகளை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது 'குழந்தை இலக்கிய அழகியல்' மீதூரப்பெற்றக் கதைகள் என்பது பொருந்தும்.
முனைவர் இரா. காமராக
Be the first to rate this book.