தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் முன்னோடி எழுத்தார்களில் குறிப்பிடத்தகுந்தவர் ரேவதி. பத்திரிக்கையாளர், அறிவியல் கதை எழுத்தாளர். குழந்தைகளுக்கான சமூக எழுத்தாளர் எனச் சென்ற திசை எல்லாம் சாதனை நிகழ்த்தியவர். அவரது மடகுத்தில் ஒரு வைரம்தான் இந்தச் சிறார் நாவல். கதையின் அடிப்படை அன்பும் அறமும்தான். களம் பழையதாக இருந்தாலும் இன்றும் பொருந்திப் போவதாகவே உள்ளது. கதைக்குள் கள்ளுக்கடை மறியல், சாதிய அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் போன்ற அரசியல் செயல்பாடுகளைப் பிரச்சாரமாக்காமல் காந்தியத் தூரிகை கொண்டு, அழகான சித்திரம் தீட்டி, கலைப் படைப்பாக்கி நம்முன் வைத்திருக்கிறார் ரேவதி. சிறுவயதிலேயே பிள்ளைகளிடம் சமூக அறிவைப் புகட்டி வளர்க்க வேண்டியதன் தேவையை நாம் உணர்ந்து கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் இந்த நூல் வெளிவருவது மிகச்சிறப்பு. பதின் பருவத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய முக்கியமான ஆவணமாக இந்த நூலைக் காண்கிறேன்; பரிந்துரைக்கிறேன்.
-யெஸ்.பாலபாரதி
Be the first to rate this book.