சரோஜா பிரகாஷின் நெடுங்கதையான 'கொச்சைக்' கிடாயும் பச்சைத் தவளையும்' ஒரு வித்தியாசமான பரப்பில் பயணம் செய்கிறது. ஆனால் பேசப்படும் உள்ளடக்கம் நம் சமூகத்தை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் ஆணாதிக்கம், சாதியாணவம். மூடநம்பிக்கைகள் போன்றவைதாம்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் காலம் காலமாக இச்சமூகம் எதை எதையோ தின்னக் கொடுத்து நிர்ப்பந்திக்கும் வரலாற்றைப் பச்சைத் தவளை குறிப்பால் உணர்த்துகிறது. ஒரு பகுத்தறிவுப் பரப்பில் கதையை நகர்த்திச் செல்ல முயன்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பிரகாஷுக்கு மொழி கைகொடுக்கிறது. சொல்ல வருவதை லாவகமான மொழியில் சொல்லிச் செல்கிறார்.
இன்றைய இளைஞர்கள் புதிய புதிய பாதைகளில் வாசகர்களை அழைத்துச் செல்வது மகிழ்ச்சியளிக்கிறது. பிரகாஷ் இக்கதையின் மூலம் ஒரு புதிய வழியில் அழைத்துச் செல்கிறார்.
-எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்
'ஜெய் பீம்' திரைப்படத்தில் உதவி இயக்குநராக இருந்து 'வேட்டையன், மாயக்கூத்து ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் ஹோட்டல் நிர்வாகம் பயின்று. சென்னை ஹயாத் ரீஜென்சி, கிராண்ட் ஹயாத் தோஹா ஹோட்டல் & வில்லாஸ் ஆகிய நட்சத்திர ஹோட்டல்களில் செஃப் ஆகப் பணியாற்றியவர். பின்னர் திரைத்துறையின் மீதான ஆர்வம் காரணமாக BOFTA-வில் திரைக்கதை. இயக்கம் பயின்றார். 'அகர வழி என்ற குறும்படத்தை (https//bit.ly/agaravazhi இயக்கியிருக்கிறார். இது இவருடைய முதல் நூல்.
Be the first to rate this book.