கிளியக்காவின் பாட்டு, புற அழகைத் தாண்டி ஒரு மனிதன் இந்த சமூகத்திற்கு என்ன நன்மையை செய்கிறான் என்பதைக் கொண்டுதான் அவனுடைய மன அழகு தீர்மானிக்கப்படுகிறது என்பதை கிளி மற்றும் தவளையைக் கொண்டு சொல்லும் கதை. அதோடு மட்டுமல்லாமல் தவளையின் சுற்றுச்சூழல் பங்கை பற்றியும் இந்த கதை பேசுகிறது.
ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியை, இவரின் படைப்புகள் 'தினசரி.காம்', 'மஞ்சரி', 'கலைமகள்', 'குவிகம் மின்னிதழ்', 'கேலக்ஸி தளம்', 'நமது உரத்த சிந்தனை', 'மலர்வனம்'. 'பூஞ்சிட்டு சிறார் மின்னிதழ்', 'மங்கையர்மலர்', 'கோகுலம்'. "இந்து தமிழ்திசையின் மாயாபஜார்', 'சிறுவர் வனம்', 'சொல்வனம்'. 'தினமலர் பட்டம்', 'ஆனந்தசந்திரிகை', 'நடுகல் மின்னிதழ்' போன்ற பல்வேறு தளங்களில் வெளிவந்துள்ளன.
இவரது "மங்கை எனும் மந்திர தீபம்" எனும் மொழிபெயர்ப்பு நூலும் "இந்துமதி கல்யாணம் எப்போ?" என்ற சிறுகதைத் தொகுப்பு நூலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
கனவு இலக்கிய அமைப்பு, திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் மற்றும் திருப்பூர் மக்கள் மாமன்றம் இணைந்து வழங்கிய 'திருப்பூர் சக்தி விருது' இந்த ஆண்டு (2024) பெற்றுள்ளார்.
Be the first to rate this book.