பிறந்து வளர்ந்து வாழ்வின் ஐம்பதாண்டுகளைக் கழித்தது சேலம் மாநகரில். தற்போது வசிப்பது பெங்களூரில். தனியார் நிறுவனமொன்றில் பொறுப்பான உயர் பதவி. பள்ளி நாட்களில் துளிர்விட்டது வாசிப்பு ஆர்வம். இந்த இலக்கிய உலகில் பலரை துரோணாச்சாரியார்களாக வரித்துக்கொண்டே இருப்பதால் இன்றுவரை ஏகலைவனாகவே கற்றலும் எழுதப் பழகும் முனைதலும் தொடர்கிறது.
இதுவரை, 'பொய்மசியின் மிச்சம்', 'காகிதத்தின் மூன்றாம் பக்கம்', 'நான் என்பதும் தோற்றப் பிழை', 'குறுக்கு வெட்டாய் ஓர் இறகு', 'தனிமை மரத்தின் நீள்நிழல்' என ஐந்து கவிதைத் தொகுப்புகளும், 'ஏகவெளி', 'யாவுமே அவள்' என்ற இரண்டு சிறுகதைத் தொகுப்புகளும் வெளியாகி இருக்கின்றன. இதில், குறுக்கு வெட்டாய் ஓர் இறகு' தொகுப்பு, 'பொள்ளாச்சி இலக்கிய வட்டம்' மற்றும் 'புன்னகை' இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கிய 2023க்கான. புன்னகை இலக்கிய விருது' கிடைத்திருக்கிறது. 'கிளைத்துப் பாயும் சிறுநதி' இவரது ஆறாவது கவிதைத் தொகுப்பாகும்.
Be the first to rate this book.