நாம் உணவில் மரபை மட்டுமே சார்ந்திருக்க வேண்டுமா? எல்லாம் மாறும் என்ற அறிவியல் கோட்பாட்டிற்கு உணவும் விலக்காகாது. அதிலும் உலகளாவிய சந்தை மாற்றத்தில் உணவுச் சந்தை முதலிடம் பிடித்துள்ள நிலையில், உணவுக் கலாச்சாரமும் மாறியே தீரும். தீரும். இம்மாற்றத்தில் நமது நிலவியலுக்கும், புறச்சூழலுக்கும், நமது மரபார்ந்த வளர்சிதை மாற்றத்திற்கும் ஏற்ற உணவு வகைகள் என்ன? மரபில் இன்று தொடர்வதற்குரிய வகைகள் எவை, இன்றைய வாழ்வியல் முறைக்கு ஏற்ப சமைக்கத் தகுந்த ஆரோக்கிய உணவுகள் எவை என விரிவாக அலசுகிறது இந்நூல். இன்றைய வாழ்க்கை மற்றும் உணவுமுறையால் தோன்றும் உடற்கேடுகள் என்ன? அவற்றைத் தவிர்ப்பதற்கான மாற்று வழிகளையும் பரிந்துரைக்கிறது இந்நூல்.
கடந்த ஆண்டு மாலைமலரில் தொடர்கட்டுரையாக வந்த போது பெரிதும் வாசகக் கவனம் பெற்ற உடல் நலக் கட்டுரைகளின் தொகுப்பே ‘கிச்சன் இருக்க கிளினிக் எதற்கு?' உணவில் சுவை எப்படிக் குறையாதிருக்க வேண்டுமோ அப்படியே வாசிப்புச் சுவைக்கும் குறை வைக்காத நூல் இது.
Be the first to rate this book.