விளையாட்டு ஒரு சமூகத்தின் தொன்மையை பண்பாட்டு மூலங்களை தன்னுள் சேகரித்து வைத்திருக்கிறது. குறிப்பாக நமது மரபு வழி விளையாட்டுகள் தோழமை உணர்வு, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை, தலைமைப் பண்பு, அச்சமின்மை, நெருக்கடிகளை எதிர்கொள்ளும் திறன், சமயோசித அறிவு போன்ற அற மதிப்புகளை உருவாக்குபவை என்பதை இந்த நூலைப் படித்து முடிக்கையில் நீங்கள் உணர்வீர்கள் இதன் முதல்பதிப்பை விகடன் பிரசுரம் வெளியிட்டது. பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாம் பதிப்பை இளவேனில் பதிப்பகம் வெளியிடுவதில் பெருமைப்படுகிறது.
"விளையாட்டை விளையாட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது..." இந்த நூலை வாசித்து முடித்த பிறகு உங்களுக்குத் தோன்றுவது இதுவாகத்தான் இருக்கும்.
கடலூர் மாவட்டம் திருமுட்டம் வட்டத்திலுள்ள மருங்கூரில் பிறந்தவர். மண்கவுச்சி என்ற தொகுப்பின் மூலம் இயக்கிய உலகுக்கு அறிமுகமானவர்.அரசு பள்ளி ஆசிரியர், கானல்வரி கலை இயக்கிய அமைப்பைத் தொடங்கி தமிழர்களின் கலைகள் சார்ந்த பன்னாட்டுக் கருத்தரங்குகளை நடத்தி வருகிறார். இதுவரை 15 நூல்களை வெளியிட்டுள்ளார். தற்போது விருத்தாசலத்தில் வசித்து வருகிறார்.
Be the first to rate this book.