இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கிற ஷாட்கள், புதுமையான மற்றும் துல் லியமான நுட்பங்களின், தெளிவான எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன. நான் இதற்காக நூற்றுக்கணக்கான திரைப்படங்களைப் பார்த்தேன். இந்த ஐந்து முக்கிய குறிக்கோள்களைப் பூர்த்தி செய்யும், கேமரா நகர்வுகள் மட்டுமே இங்கு கொடுக்கப்பட்டிருக்கின்றன; அவை,
1. கதாபாத்திரத்தின் உணர்வுநிலையை வெளிப்படுத்த வேண்டும்
2. கதையைச் சொல்ல வேண்டும்.
3. விலை உயர்ந்தவை போலத் தெரிய வேண்டும் (ஆனால், குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படக்கூடிய சாத்தியம் கொண்டவை)
4. நாமும் இதுபோன்ற ஷாட்களை எடுப்பதற்கு எளிதானவையாக இருக்க வேண்டும்,
5. மிக முக்கியமாக, ஒவ்வொரு ஷாட்டும் நம் கதைக்கும் காட்சியின் உணர்விற்கும் ஏற்றபடி, மாற்றியமைத்துப் பயன்படுத்த ஏதுவாக இருக்க வேண்டும்.
உங்கள் பட்ஜெட் எதுவாகயிருந்தாலும், இப்புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிற ஒவ்வொரு ஷாட்டையும், நீங்களே, உங்கள் காட்சிக்குத் தகுந்தபடி உருவாக்க முடியும். பட்ஜெட்டும், விலையுயர்ந்த தொழில்நுட்பக் கருவிகளும், உங்களுக்குத் தடையாக இருந்துவிடக்கூடாது என்பதிலும் கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. பெரும்பாலான நேரங்களில், குறைந்தபட்ச உபகரணங்களைப் பயன்படுத்தியே இந்த ஷாட்களை உங்களால் எடுத்துவிட முடியும். மேலும் திறமையானவர்கள் ஒரு ஹேண்ட்ஹெல்ட் கேமரா மூலமாகவோ, அல்லது விலை மலிவான ஸ்டெபிலைசரைப் ஒரு (stabilizer) பயன்படுத்தியோ, இங்கு விளக்கப்பட்டிருக்கிற கேமரா நுட்பங்களை, உங்கள் படத்திற்காக, நீங்கள் எடுத்துவிடலாம். உங்களுக்குத் தேவை, ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்கும் திறன்தான்.
அடிப்படையாக, இந்தப் புத்தகம் உங்களைக் கற்பனை செய்யத் தூண்டுகிறது. ஆக்கப்பூர்வமான வழிகளில் சிந்திக்க ஊக்கமளிக்கிறது. ஒரு கேமரா உத்தி விளக்கப்பட்டு, அதற்கான உதாரணத்தை ஒரு திரைப்படக் காட்சியிலிருந்தும் கொடுத்திருப்போம். பின்னர், உதாரணங்கள், வரைபடங்களாகவும், பிம்பங்களாகவும் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள், இந்த ஸ்டில் ஃப்ரேம்கள் மற்றும் மேல்நிலை வரைபடங்களைப் பார்த்துப் படித்து, இதனடிப்படையில் ஷாட்களை எவ்வாறு உருவாக்குவது என்று கற்பனை செய்துபாருங்கள். ஏற்கனவே, இந்த ஷாட் எப்படி எடுக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கிற திரைப்படங்களையும் தேடிப்பாருங்கள்.
நீங்கள் அடுத்து எந்தவொரு திரைப்படத்தைப் பார்த்தாலும், அதில் காட்சிகள் எப்படி எடுக்கப்பட்டிருக்கின்றன? ஷாட் எப்படி வடிவமைக்கப்பட்டிருக்கின்றன? என்ன லென்ஸ் பயன்படுத்தியிருக்கிறார்கள்? படத்தொகுப்பு நுட்பம் என, அனைத்தைக் குறித்தும் ஆராய்ந்து பார்க்கும் பயிற்சியை இப்புத்தகம் தானாகவே உங்களுக்குள் கொண்டுவரும். அதற்குப் பிறகு, நீங்கள் திரைப்படங்கள் பார்க்கிற பார்வையும், அணுகுமுறையும் கூட மாறும். எனவே, பார்வையாளரிலிருந்து, இயக்குநர் எனும் நிலைக்கு உயர, உங்களுக்கு இந்தப் பயிற்சி அவசியம். ஒரு சாதாரண பார்வையாளர் திரைப்படம் பார்க்கும் பார்வையும், ஒரு இயக்குநர் திரைப்படம் பார்க்கும் பார்வையும் இப்படித்தான் வித்தியாசப்படுகின்றன. இந்தப் புத்தகத்தின் நோக்கமும் அதுதான்; கேமரா நுட்பங்களை, அதன் இயக்கங்களைத் தெளிவாகக் கற்பனை செய்துபார்க்க, உங்களைப் பழக்கப்படுத்துவது.
சிக்கலான சூழலிலும் படப்பிடிப்புத் தளத்தில், சிறப்பாக ஒரு காட்சியை எடுத்துமுடிக்க, கதை மற்றும் கதாபாத்திரங்களின் உணர்வை, காட்சிமொழி வாயிலாகப் படம்பிடிக்க.
இப்புத்தகம் உங்களுக்கு உதவும்.
Be the first to rate this book.