எனது எழுத்துக்களின் மீதும் நான் கூற வரும் கருத்துக்களின் மீதும் எனக்கு அதிக நம்பிக்கை உண்டு! அது என்றைக்காவது ஒரு நாள் பெரும் மக்கள் கூட்டத்திட சென்று சேரும் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையில் இந்த நூலை உங்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன். இந்த நூலை வாசிக்கப் போகும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்! இந்நூல் சுவாரசியமாக விறுவிறுப்புடன் நகரும் 'திரில்லர் கதை'! மிகப்பெரிய 'சஸ்பென்ஸ் திரில்லர்' புதினங்களை எழுத வேண்டும் என்பது எனது ஆசைகளில் ஒன்று! அதற்கு இந்நூல் ஒரு சிறிய முன்னோட்டமாக அமையும் எனக் கருதுகிறேன். திரில்லர் விரும்பிகளுக்கு இந்நூல் நிச்சயம் பிடிக்கும் என நம்புகிறேன்.
Be the first to rate this book.