ஒரு சாதாரண விவசாயியாக வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் தனது ராணுவச் செயலாற்றலால் தானாகவே வளர்ந்து கிழக்கிந்திய கம்பெனிப் பணியில் உயர் அந்தஸ்துமிக்க பதவி வரை உயர்ந்தவரும், தென்னிந்தியாவின் மிகவும் கொந்தளிப்பான இரண்டு மாகாணங்களையும் தனது நிர்வாகத் திறமையால் கட்டுக்குள் கொண்டு வந்த கெட்டிக்காரருமான யூசுப்கான் ஓர் அசாதாரண ஆளுமையை. ஜேம்ஸ் மில் கூறுவதைப் போல, இறுதியில், தற்காப்புக்காக நவாபுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்யும் நிர்பந்தம் ஏற்பட்டபோது, ஆங்கிலேயர்களின் முழு பலத்தையும் துணையாகக் கொண்டிருந்த அந்த அரசரையே எதிர்த்து ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகாலம் சமர் புரிந்து தன்னை காத்துக் கொள்ளும் பேராற்றல் கொண்டிருந்த யூசுப்கான், கடைசியில் வீழ்ந்தது தனது சொந்தப் படையினரின் துரோகத்தால் தானே தவிர எதிரிப் படைகளால் அல்ல.
யூசுப்கான் இறுதி வரையிலும் பெரும் தீரத்துடன் போராடியதையும், அசாத்திய துணிச்சலுடன் அவர் மரணத்தை தழுவியதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர் மறைந்தாலும், அவர் எந்த மக்களுக்கு ஆட்சியாளராக இருந்து ஆண்டாரோ அந்த மக்கள் மத்தியில் 'செயற்திறன், உறுதித்தன்மை மற்றும் நீதி பரிபாலனம் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர்' என்ற நற்பெயரை ஆழமாக பதித்து விட்டே சென்றிருக்கிறார்.
Be the first to rate this book.