நான் ஒரு ஜீனியஸ்..எனக்கு அது தெரியும். அதுதான் என் பிரச்சினை..என் நுட்பமான அறிவின் சுமைதான் என் துக்கத்தின் ஆணிவேர்.தொட்டனைத்தூறும் இந்த மணற்கேணியை எந்தக் கற்றாரும் காமுறவில்லை.இருந்திருந்தால் இப்படி அன்புக்கு ஏங்கும் ஒரு வாழ்வை வாழ்ந்திருக்க மாட்டேன்.
எப்போதும் கூடிக் களித்ததில்லை.எப்போதும் என் தனிமையில் உழல்கிறேன். தனிமைதான் என் துணையாகவும் தோழனாகவும் என்னுடன் நடந்து வருகிறது.
Be the first to rate this book.