மனிதரில், பதினாயிரம் பேரில் ஒருத்தர் வேண்டுமானால் சுயமோகியாக இல்லாமல் இருக்கலாம். ஒருத்தரை சுயமோகியா என்று பார்க்க ஒருசுலப வழியிருக்கிறது. முகம் பார்க்கும் நிலைக்கண்ணாடிக்கு முன்னால் தனிமையில் ஒருவர் நிற்கிறார் என்றால் அவருக்குத் தெரியாமல் நீங்கள் அவரைக் கவனித்துப் பார்த்தாக வேண்டும் அட்டா. குரங்கு கெட்டது போங்கள். தனது வாழ்நாளில் சரிபாதிக்குப் பிறகு முகம் பார்க்கும் காண்ணாடியையே பார்க்காத ஒரு 'பைத்திய' மனுசன் வாழ்ந்தது நம் காலத்தில்தான். வெளிநாட்டு ஓவியன் ஒருத்தன் அம் மனுசனுடைய முக வடிவத்தை வரைந்து கொண்டு போய் அவரிடம் காட்டினான், கையெழுத்து வாங்க. "என்னது. யார் படம் இது?” என்று கேட்டார் அந்தப் பாவி மட்டை, யாரா தெரியலையா! நீங்கதாம் நானா என் காதுகள் இவ்வளவு பெரிசா?" "பெரிசோ இல்லையோ: உள்ளபடிக்கு வரைந்தேன் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பதில்லையா நீங்கள்?" "என் மூஞ்சியைக் கண்ணாடியில் பார்ப்பதை விட்டொழித்து மிகப் பல வருடங்கள் ஆகிவிட்டன" என்று பதில் சொன்னவர் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.
Be the first to rate this book.