வர்ணம், சாதி, தீண்டாமை ஆகியவற்றை முன்னிறுத்தி எழுந்த இந்தியச் சமூக அமைப்பு, மக்களின் உழைப்பையும் பொருளாதாரத்தையும் சுரண்டுவதற்கான உத்திகளை வலுவாகக் கட்டமைத்து வைத்திருந்தது. இதன் மற்றொரு பரிமாணமாக, இடைக்காலங்களில் தீவிரமடைந்த கடல்சார் வணிக உறவுகளினூடாகக் கேரளத்தில் அடிமை வியாபாரம் வளர்ச்சியடைந்தது. ஒருவகையில் தென்னிந்தியாவில் நிலவிய தீண்டாமைக்கும் உலக அளவில் வலுப்பெற்று எழுந்த அடிமை வியாபாரத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதான புதியதொரு வாசிப்பை முன்வைக்கிறது இப்புத்தகம்.
அரசியல், அதிகாரம், சமூகம் ஆகியவற்றோடு மட்டுமல்லாமல் மதங்களோடும் போரிட வேண்டிய தேவை இந்த மண்ணின் மக்களுக்கு இருக்கிறது. இதனை இந்த நூல் மிக அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறது.
Be the first to rate this book.