தமிழின் பெருமையை உரைநடையை விடவும் கவிதைகள்தான் உலகிற்கு உணர்த்தும் வல்லமைமிக்கதாக இருக்கின்றன. இப்பிரபஞ்சத்தில் கவிஞர்களின் பொதுவான மொழி கவிதையாகவே இருக்கிறது என்பதில் எந்தப் பொய்யும் இல்லை. உலகின் ஆகச் சிறந்த கவிதைகள் நம் தாய்மொழி தமிழிலேயே எழுதப்படுகின்றன. எடுத்துக்காட்டாய் எத்தனையோ தமிழ்க்கவிஞர்களின் கவிதை நூல்கள் தனித்தனியே எழுதப்பட்ட போதும் பெரும்பாலான கவிஞர்களின் கவிதைகளை ஒரே நூலில் இடம் பெறச் செய்ய வேண்டுமென அதற்கான பணியில் இறங்கி எனக்குப் பிடித்த கவிதைகள் என்ற நூலினை முதல் தொகுப்பாக கொண்டு வந்தேன். இப்போது அதே போல் 'கவிதையிடம் எந்தப் புகாருமில்லை' என்ற இரண்டாவது தொகுப்பு நூலைக் கொண்டு வருகிறேன். இதுபோல் இன்னும் சில தொகுப்புகளைக் கொண்டுவர காலம் அனுமதிக்க வேண்டும்.
Be the first to rate this book.