இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள் பெரும்பாலும் 1975 முதல் 1992 வரையிலான காலகட்டத்தில் என்னால் எழுதப்பட்டவை. இருள் பற்றிய கவிதைகளையும் இன்னும் சில கவிதைகளையும் 2002 ஆம் ஆண்டுக்கு முன்னர் எழுதினேன். அப்புறம் ஏனோ கவிதை எழுதிட முயலவில்லை. 'கவிதை எழுதுவது என் வேலை அல்ல' தொகுப்பு மூலம் இரண்டாயிரமாண்டுப் பாரம்பரியமான தமிழ்க் கவிஞர்களின் வரிசையில் என பெயரும் இடம் பெற்றுள்ளது. ஒருவகையில் சொன்னால் நானும் கவிஞன்தான் என்று ஜீப்பில் ஏறியுள்ளேன். சரி, இருக்கட்டும்.
எனது கவிதைகள் தமிழ்ச் சமூகத்தை உய்விக்க எழுதப்பட்டவை என்று சொல்வதற்கு எவ்விதமான முகாந்திரங்களும் இல்லை. என்றாலும் என்னைச் சுற்றிலும் நடைபெற்ற பல்வேறு சமூக நிகழ்வுகளை முன்வைத்து எழுதப்பட்ட கவிதை வரிகளில் அரசியல் பொதிந்துள்ளதை வாசிக்கும்போது அறிந்திட முடியும். மோதல், தென்புலத்தார். யாத்திரை, சலித்த மானுடன் போன்ற கவிதைகள், சமகால அரசியல் பின்புலத்தில் எழுதப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.
Be the first to rate this book.