இது என்னுடைய மூன்றாவது நாவல். முதல் இரு நாவல்களில் இருந்தும் முற்றுமாய் வேறு ஒரு தளத்தில் இந்நாவல் இயங்குகிறது.'இந்த விதை முளைக்கும்' என்னும் என் முதல் நாவலைப் போல் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கி, அப்படியே விட்டுவிட்டு, மறுபடியும் நினைவு வந்து எடுத்து எழுதி முடித்த நாவல்தான் இதுவும்.
சாதியமும், ஆணாதிக்கமும் நிறைந்த சமூகத்தில் அவற்றை நான் நேரடியாக எவ்வளவு உதறி இருக்கிறேன் என்னும் கணக்கு ஒருபுறம் இருக்க, ஈவு இரக்கம் ஏதுமின்றி அவற்றை எதிர்த்திட வேண்டும் என்பதில் நான் கொண்டிருக்கும் மனஉறுதியின் மறுவெளிப்பாடே இந்நாவலும் என்று கூறலாம். கருத்துகளையும் கோட்பாடுகளையும் கதையாக்குவதில் உரிய கவனம் வேண்டும் என்று எப்போதும் நினைக்கிறவன் நான். இந்த நாவலிலும் கதைத்தன்மை குறைந்துவிடாமல் பார்த்துக்கொள்ள பெருமுயற்சி எடுத்திருக்கிறேன்.
Be the first to rate this book.