கு அழகிரிசாமி எழுதிய இரண்டாவது மேடை நாடகம் கவிச்சக்கரவர்த்தி கம்பரது வரலாற்றைச் சொல்லும் நாடகம் "கம்பர் சோழநாட்டின் திருவழுத்தூரைச் சேர்ந்த ஆதித்தன் என்பவரின் மகள் திருவெண்ணைநல்லூரில் வாழ்ந்த சடையப்ப வள்ளலின் ஆதரவைப் பெற்றவர். ராமாயணத்தைத் தமிழில் எழுதியவர்: இவை மட்டும்தான் ஆதாரப்பூர்வமான வரலாறு இதைத் தவிர கம்பரைப் பற்றி கூறப்படும் பல கதைகளும் விவாதத்திற்கு உட்பட்டவை.
எனினும் பல கதைகளை அளைவரும் ஒப்புக்கொள்வர் ஆக வரலாறு பலரும் ஒப்புக்கொண்ட சில கட்டுக்கதை. தனிப்பாடல் அடிப்படையிலான தன் சொந்தக் கற்பனைகள் ஆகியன சேர்த்து கு.அழகிரிசாமி எழுதிய நாடகம் சுவிச்சக்கரவர்த்தி நூலாகவும் வெளியிடப்பட்ட நாடகப் பனுவல் இது மன்னார் எதிர்த்து போர்க்குரல் எழுப்பிய கம்பரை மக்கள்கலியாகக் கொண்டாடும் இந்த நாடகம் இன்றும் பொருத்தப்பாடு உடையது.
கு. அழகிரிசாமியின் எளிமையும் தெளிவும் அழகும் மிதக்கும் நடைக்கு இன்னொரு உயர்ந்த அடையாளம் கவிச்சக்கரவர்த்தி என்ற இந்த நாடகப் பனுவல் படிக்கச் சுவை தரும் நூல் நடிக்க உணர்ச்சி தரும் பிரதி கவிச்சக்கரவர்த்தி தமிழ்நாடு அரசின் பரிசினைப் பெற்ற கவிச்சக்கரவர்த்தி கு.அழகிரிசாமியின் நீண்ட நாள் கனவுகளுள் ஒன்று.
கு. அழகிரிசாமி தன் மானசீக ஞான குருவுக்கு எழுப்பிய சொற்கோயில் இந்நூல்.
Be the first to rate this book.