மனநலம்
மண்ணை
வாரி வீசுகிறான்
அவன்
தலையில்
மண்ணை வாரிப்
போட்டுக் கொள்வதில்லை
மற்றவர்கள் மீது
கல்லெறிகிறான்
தன்னைக் கல்லால்
அடித்துக் கொள்வதில்லை
அவனை
அவனே
திட்டுவதில்லை
ஊரைத்தான் திட்டுகிறான்
இவ்வளவு
தெளிவாக
தன்னைத் தானே
காப்பாற்றிக் கொள்பவனை
எப்படி
மனநலம்
பாதிக்கப்பட்டவன்
என்று சொல்வது?
Be the first to rate this book.