கத்தியின்றி ரத்தமின்றி நிகழ்த்தப்படும் சைபர் குற்றங்கள் இன்று மனித குலம் எதிர்கொண்டுள்ள ஆகப்பெரிய சிக்கல். நாம் பாதுகாப்பாக இருப்பதாய் நம்பும் நமது வீட்டின் வரவேற்பறைக்கே வந்துவிட்டன சைபர் க்ரைம்கள்.
அதற்காக டிஜிட்டலே வேண்டாம் என்று மீண்டும் கற்காலத்திற்கா செல்ல முடியும்? இவற்றோடு வாழப் பழகுவது மட்டுமே ஒரே வழி. இதற்கான உத்திகளைச் சொல்லித்தருவதே ‘கத்தியின்றி ரத்தமின்றி.’ ஒரு கதை. அதன் கருவாய் ஒரு சைபர் க்ரைம். எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்னும் விளக்கம். அக்குற்றத்தில் சிக்காமலிருக்கும் வழிமுறைகள். இவ்வாறுதான் வடிவமைக்கப்பட்டுள்ளது கத்தியின்றி ரத்தமின்றியின் ஒவ்வொரு அத்தியாயமும். அவ்வளவாய் அறியப்பட்டிராத ஆனால் கட்டாயம் அறிந்துகொள்ளவேண்டிய விதவிதமான சைபர் குற்றங்களை விவரிக்கிறது கத்தியின்றி ரத்தமின்றி.
Be the first to rate this book.