இந்த ‘கதைசொல்லி எலி’ நூலில் உள்ள, ‘பாத்திமாவின் மேகக் கனவு’, ‘வட்டம் போட்ட வண்ணத்துப்பூச்சிகள்’, ‘குரங்குகள் துரத்திய எழுத்துக்கள்’ என்று தலைப்புகளே நம்மைக் கவர்கின்றன.
சென்னைவாசியான கன்னிக்கோவில் இராஜா, தனியார் நிறுவனத்தில் நூல்களை வடிவமைத்து வருபவர். சிறுவர் இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றுபவர். 'குழந்தை இலக்கிய ரத்னா' உட்பட பல விருதுகளும் பெற்றிருக்கிறார். தொடர்ந்து குழந்தைகளுக்கான கதைசொல்லியாக இருக்கிறார். லாலிபாப் சிறுவர் உலகம் என்கிற அமைப்பை உருவாக்கி குழந்தைகளின் தனித்திறமைகளை ஊக்குவித்து வருகிறார்.
Be the first to rate this book.