சுகுமாரன் தனக்குத்தானே ஒரு விதியை வகுத்துக்கொண்டு இந்தக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தன் ரசனையின் அடிப்படையில் சாகித்திய அகாடமி விருதுபெற்ற இருபது படைப்புகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அவற்றில் வெளிப்படும் வாழ்க்கையின் தரிசனங்களைத் தொகுத்துள்ளார்.
மு.வரதராசன், நா.பார்த்தசாரதி, ஜெயகாந்தன், ராஜம் கிருஷ்ணன், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன் போன்ற மூத்த தலைமுறையினரிடமிருந்து தொடங்கி, எஸ்.ராமகிருஷ்ணன், இமையம், தேவிபாரதி போன்ற இப்போதைய தலைமுறையினர் வரை இப்பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர். தமிழ்ப்படைப்புகளின் வலிமையை உணர்ந்து, படைப்புகளைத் தேடியெடுத்து ஊன்றிப் படிக்கும் ஆர்வத்தை பொது வாசகர்களிடையில் இத்தொகுதி உருவாக்கும்.
பல ஆண்டுகால தொடர்ச்சியான தன் வாசிப்பு அனுபவத்தின் அடிப்படையில் படைப்புகளில் பிரதிபலிக்கும் வாழ்க்கை அம்சங்களைத் தொட்டுக்காட்டி, வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்கும் இடையில் நிலவும் உறவை உணர்த்தும் வகையில் கட்டுரைகளை அமைத்திருக்கிறார்.
வாசகர்களுக்கு இதுபோன்ற குறிப்புகள் மிக முக்கியம். ஒரு வழிகாட்டியாக இவை அமைந்து வாசிப்பை மேம்படுத்திக்கொள்ள உதவும். நேரடி வாசிப்பில் தென்படாத அம்சங்களை, கண்டுணர முடியாத மானுட நெருக்கடிகளை அறிவதற்கும் உணர்வதற்கும் இந்த வாசிப்பு உதவியாக இருக்கும்.
– பாவண்ணன்
Be the first to rate this book.