கதை சொல்லல் ஒரு ஆதிக்கலை. பொதுவாகவே நாம் புத்தகங்களில் வாசிக்கும் அனைத்துக் கதைகளையும் குழந்தைகளிடம் சொல்லி விட முடியாது. சில கதைகள் வாசிக்கத் தகுந்த கதைகளாகவும் சில கதைகள் சொல்லத் தகுந்த கதைகளாகவும் இருப்பதை வாசிக்கும்போது நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். நவீன சிறார் இலக்கியத்தில் சொல்லத் தகுந்த கதைகள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றில் 10 கதைகளைத் தேர்ந்தெடுத்து இந்தத் தொகுப்பில் கொடுத்திருக்கிறோம்.
கதை சொல்லிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் யாரெல்லாம் குழந்தைகளுக்குக் கதை சொல்ல விரும்புகிறார்களோ அவர்களுக்கும் இந்தத் தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தக் கதைகளைக் குழந்தைகளுக்குச் சொல்பவர்கள் குழந்தைகளின் டார்லிங் ஆக மாறிவிடுவார்கள் என்பது நிச்சயம்.
உதயசங்கர் (1960) நாற்பது ஆண்டுகளாக சிறுகதை, கவிதை, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு, கட்டுரை, ஆகிய வகைமைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். குறிப்பாக சிறார் இலக்கியத்தில் நாவல், சிறுகதை, பாடல், கட்டுரை, மொழிபெயர்ப்பு என்று எல்லா வகைமைகளிலும் தொடர்ந்து பங்களித்து வருகிறார். விகடன் விருது. தமிழ்ப் பேராயம் விருது, தமுஎகச விருது. சுலை இலக்கியப் பெருமன்ற விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஈரோட்டைச் சேர்ந்த கதைசொல்லி சரிதா ஜோ,உளவியல், தமிழ், கல்வியியல் ஆகிய துறைகளில் முதுநிலைப் பட்டமும், தற்காப்புக் கலையான குங்ஃபூவில் கறுப்புப் பட்டையும் பெற்றுள்ளார். கதை சொல்லியாகவும் சிறார் எழுத்தாளராகவும் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பட்டிமன்றப் பேச்சாளராகவும் மிளிர்கிறார்.
'ஸ்கேன் ஃபவுண்டேஷன் இந்தியா விலங்குகள் நல அமைப்பின் தூதுவராக இருக்கிறார். தமிழ்நாடு கலை இலக்கிய மேடையின் அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருதும் திருப்பூர் சக்தி விருதும் பெற்றுள்ளார். மந்திரக் கிலுகிலுப்பை இவருடைய முதல் சிறார் நாவலாகும்.
Be the first to rate this book.