இந்தப் புத்தகம் ஒரு வெற்றிகரமான எழுத்தாளரின் அனுபவப் பகிர்வு. ஸ்டீபன் கிங் தனது ஆரம்பகால வாழ்க்கை குறித்தும், எழுத்தின் மீதான அவரது காதல் எப்படித் தோன்றியது என்பது குறித்தும் வெளிப்படையாகப் பேசுகிறார். பணப்பற்றாக்குறை, கடின உழைப்பு, நிராகரிப்புகள் என அவர் சந்தித்த சவால்கள், எந்தவொரு படைப்பாளியும் உண்மையில் எதிர்கொள்ளக்கூடிய சூழ்நிலைகளைப் பிரதிபலிக்கின்றன. முக்கியமாக, ஒரு எழுத்தாளருக்குத் தேவைப்படக்கூடிய அடிப்படை ஆற்றல்களான தொடர்ச்சியான வாசிப்பு (Reading Consistently) A (Writing Consistently) ஆகியவற்றின் அவசியத்தையும் கிங் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். இது, இளம் வாசகர்களுக்கும், எழுத்தாளராக வர விரும்புபவர்களுக்கும் ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது. எந்த ஒரு துறையிலும் வெற்றி பெற விடாமுயற்சியும், கற்றுக்கொள்ளும் மனப்பான்மையும் எவ்வளவு முக்கியம் என்பதை அவரது வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.
இந்த நூல், ஓர் எழுத்தாளன் எப்படித் தன்னைத் தானே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான நடைமுறைப் பாடங்களை நமக்கு வழங்குகிறது. எழுதுவதற்கு ஒரு குறிப்பிட்ட இடம். நேரம் (Dedicated Space and Time for Writing) ஒதுக்க வேண்டியதன் அவசியம். எழுத்தில் நேர்மை (Honesty in Writing), மற்றும் கதையின் ஓட்டத்தை சிதைக்காத திருத்தங்கள் (Revisions that Don't Spoil the Flow) செய்வது எப்படி? என்பவை போன்ற அரிய ஆலோசனைகளை கிங் வழங்குகிறார். இது, வெறும் புனைவு எழுத்தாளர்களுக்கு மட்டுமல்ல. திரைக்கதை ஆசிரியர்கள், இயக்குனர்கள் என கதை சொல்லும் கலையில் ஈடுபடும் அனைவருக்கும் பொருந்தும். ஒரு கதையின் உள்ளடக்கம், அதன் கட்டமைப்பு (Structure) எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அடிப்படைப் புரிதலை இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. ஒரு கதையின் மையக்கருவை (Core Idea) அதன் முழுமையான கட்டமைப்புடன் வெளிப்படுத்துவது எப்படி என்பதையும் கிங் இந்நூலில் விவாதிக்கிறார்.
திரைக்கதை ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்கள், இந்தப் புத்தகத்திலிருந்து கதை உருவாக்கம் Story Conception) மற்றும் கதாபாத்திர மேம்பாடு (Character Development) குறித்த ஆழமான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். காட்சிகளை உருவாக்குதல். உரையாடல்களை எழுதுதல் ஆகியவற்றுக்குத் தேவையான நுண்ணறிவுகளையும், அவர் தனது புனைவு நுட்பங்கள் மூலம் மறைமுகமாக உணர்த்துகிறார். திரைக்கதை ஆசிரியர்கள் ஒரு வலுவான அடித்தளத்துடன் (Strong Foundation) கதையை உருவாக்கவும், இயக்குநர்கள் அந்த கதையை காட்சி மொழியில் (Visual Language) எப்படிப் படமாக்குவது என்பதைப் புரிந்துகொள்ளவும்கூட இந்தப் பகுதி உதவும்.
சுருக்கமாகச் சொன்னால், ஸ்டீபன் கிங்கின் 'ஆன் ரைட்டிங்' நூலின் முதல் பகுதி. எழுதுதலை ஒரு கலையாகவும், அதே சமயம் ஒரு தொழிலாகவும் அணுகுவது எப்படி என்பதற்கான ஒரு விரிவான வழிகாட்டி கதை சொல்லும் கலையில் ஈடுபடும் திரைக்கதை ஆசிரியர்கள் மற்றும் (உதவி) இயக்குனர்கள், ஒரு கதையின் ஆன்மாவை (Soul of a Story எப்படிப் புரிந்துகொண்டு. அதைத் தங்கள் படைப்புகளில் பிரதிபலிப்பது என்பதற்கான ஆழமான நுட்பங்களை இந்நூலின் வாயிலாகப் பெறலாம். இந்த நூல், உங்களை ஒரு சிறந்த கதைசொல்லியாக மாற்றுவதற்கான முதல் அடியை எடுத்துவைக்கத் தூண்டும்.
Be the first to rate this book.