கால நகர்வில்
பல கவிஞர்கள்
வருவார்கள். பல
கவிதைகள் பிறப்பெடுக்கும்.
ஆனால் சில கவிதைகளும்
சில கவிஞர்களும் மட்டுமே
பல யுகங்களிற்கு வாழ்வதுண்டு.
கவிதைகளைத் தவிர
சிறுகதைகள், நாடகங்கள்
போன்ற படைப்பாக்கங்களும்
இவ்வாறுதான்.
இது அவர்களின்
எழுத்துக்கள் பிரதிபலித்த
காலத்தையும் கருத்தையும் பொறுத்தது.
இந்த வகையில் கஸ்தூரியின்
எழுத்துக்கள் யுகம் யுகமாக வாழப்போகின்றன.
தனது எழுத்துக்களில் தனிமனித
உணர்வுகளை மட்டும் மையாக ஊற்றாது
முழு உலகிற்குமான
மானுட வாழ்வின் அவலங்களை,
தேவைகளை, மறுக்கப்பட்ட
உரிமைகளை, நீதிகளை, ஆவேசமாக
எதிர்க்கும் தன்மைகளை இவள்
மையாக ஊற்றி இருக்கின்றாள்.
Be the first to rate this book.