மனிதனுக்கு வாழ்வில் கிடைக்கும் அனுபவங்களே அவனைப் பக்குவப்படுத்துகின்றன. வாழ்க்கையில் நம் கடமையைச் செய்துகொண்டு நடப்பதை ஏற்கும் பக்குவத்தை மட்டுமே நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். மனிதனுக்கு நிதானமும் பொறுமையும் எப்போதும் தேவை. மண்ணில் பிறக்கும், ஒவ்வொரு குழந்தையும் கேள்விகளின் வழியேதான் இவ்வுலகைப் புரிந்து கொள்ள முற்படுகிறது. குழந்தை வளர வளர கேள்விகளும் உடன் வளர்கின்றன. கூடவே ஒவ்வொருக்குள்ளும் பல்வேறு கேள்விகளும் சந்தேகங்களும் குழப்பங்களும் எழுகின்றன. அப்படி ஏற்படும் குழப்பங்களுக்கு ஆன்மிகம் தீர்வு சொல்கிறது. ஆன்மிகம் என்பது கடவுள் சார்ந்தது அல்ல, மனதைப் பக்குவப்படுத்தி, வாழ்வில் எது நடந்தாலும் அமைதியாக எதிர் கொள்ள நம்மை ஆற்றுப்படுத்தும் வழியே ஆன்மிகம். அந்த வழியில் அல்கெமி எனும் நிகழ்ச்சி மூலம் பல லட்சக்கணக்கானோர் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார் குரு மித்ரேஷிவா. குரு மித்ரேஷிவாவிடம் இதுவரை கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த முக்கிய பதில்களின் தொகுப்பு இந்த நூல்.
Be the first to rate this book.