ஏன் ஒருவன் கதை எழுத வேண்டும். அவற்றை நான் படிக்கத் தர வேண்டுமென நினைக்கிறான். கதை ஒருவனின் வாழ்வை மாற்றிவிடுமா. தெரியவில்லை. ஆனால் கதைகள் உன் பொழுதுகளை சுவராஸ்யங்களாய் மாற்றிவிடும். அடுத்து கதையில் என்ன நடந்துவிடும் எனும் பதற்றத்தோடு படிக்கத் தொடங்குகிறபோது கதை நம்மை ஏதோ ஒருவிதத்தில் பாதிக்க ஆரம்பித்துவிடும். கதையாசிரியரும் கதைக்குள் ஒரு கதாபாத்திரமாய் வந்துகொண்டே இருக்கிறார். கதை சொல்பவரும் கதைக்குள் இருக்கும்போது கதை உண்மைகளை மட்டுமே சொல்லிச் செல்கின்றன. பெரும்பாலான கதைகள் கதை எழுதுபவனின் வாழ்வில் நடந்த உண்மையான சம்பவங்கள்தான். எல்லோர் வாழ்விலும் யாராவது தொலைந்துபோயிருப்பார்கள். நானும் நிறைய அனுபவங்களைக் கண்கூடாய்ப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் வயதான அம்மாக்கள் அப்பாக்கள் தொலைந்துபோவார்கள். தொலைந்தவர்கள் தேடிக் கிடைக்காத போது நம் வாழ்வில் மிகப் பெரிய வலி உண்டாகிவிடும். இவரின் கதையில் அம்மா முதல் இரண்டுமுறை தொலைந்துபோய் கிடைத்துவிடுகிறார். மூன்றாவது இறந்துபோய் கிடைக்கிறார். நீங்களும் கண்ணனின் கதைகளைப் படித்துப்பாருங்கள். உங்களுக்கும் புதிதான அனுபவங்கள் கிட்டும்.
-அய்யப்ப மாதவன்
Be the first to rate this book.