இந்த சமுதாயத்திற்காக எனது சிறு வேண்டுகோள்
மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஒவ்வொருக்குள்ளும், தனித்திறமைகள் உண்டு.. திறமைகளை கண்டுபிடித்து பட்டைத்தீட்டி, பரந்து விரிந்த இவ்வுலகில், அவர்களையும் சாதனையாளர்களாக மாற்றவோம்.
அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ஒளி ஏற்றுவோம்! இந்த சமுதாயத்தில் அவர்களுக்கான பாதைகளை உருவாக்குவோம்! மாற்றுத்திறனாளிகளை சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைக்காமல், அவர்களை இணைத்து வாழ வேண்டிய சூழ்நிலையும் உருவாக்குவோம். இது நம் ஒவ்வொரு மனிதனின் கடமை என்று உறுதி ஏற்போம். மாற்றுத்திறனாளிகளை வளர விடுங்கள். அவர்களுக்கும் ஆசைகளும், கனவுகளும் உண்டு. அதற்காக வழி விடுங்கள். தடைகளை ஏற்படுத்தாதீர்கள். இந்த உலகம் அனைவருக்கும் ஆனது. மாற்றம் ஒன்றே மாறாதது. மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து, அவர்களையும் உள்ளடக்கிய ஒன்றிணைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம்.
எல்லாவற்றிலும் சம உரிமை, சம வாய்ப் களுக்கான சட்டம் இருந்தாலும், சமூகத்தில் உள்ள குறைகளால் மாற்றுத்திறனாளிகள் எல்லா தளத்திலும் முடக்கப்படுகிறார்கள்.
இயற்கையின் படைப்பில் ஒவ்வொரு வித்தியாசமானவர்கள்! பிறப்பில் மாற்றுத்திறனாளிகள். மனிதரும் உடலிலோ, அறிவிலோ சிறிது குறை இருக்கலாம். ஆனால், அவர்களின் கனவுகளில் அல்ல ஆயிரம், ஆயிரம் கனவுகளோடு பயணிக்கும். அவர்களின் பயணத்தில் குறைய?! அல்லது குற்றமா?? இதை மறுக்கும். மறைக்கும். அரசியலிலும், சமுதாயத்திலும் தான் குறை உள்ளது. இந்த குறைகள் களையப்பட வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளையும் ஒன்றிணைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம்!, என்று உறுதி ஏற்போம்..
Be the first to rate this book.