மார்க்ஸ் என்பது வெறும் சொல் அல்ல; இருட்டறையில் உழலும் உழைக்கும் மக்களின் நம்பிக்கை. வெளிச்சக்கீற்று.'
'தூய காற்றுக்கான தேவைகூட இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. மனிதன் மீண்டும் குகையில் வாழச் செல்கின்றான். ஆனால் இக்குகை இப்போது நாகரிகத்தால் சுவாசித்து வெளியேற்றப்பட்ட நாசகரமான நச்சுக் காற்றால் மாசுபட்டுள்ளது' என்பதுடன், 'ஒரு முழுச் சமுதாயமோ, ஒரு தேசமோ, ஏன் ஒரே காலகட்டத்தில் நிலவுகின்ற சமுதாயங்கள் அனைத்துமோ புவிக்கோளத்தின் உடைமையாளர் அல்ல. புவிக்கோளத்தின் மீது இவற்றுக்கு அனுபோக உரிமை, அதில் எந்த அடிப்படையான மாற்றமும் செய்யாமல் அதை அனுபவிக்கும் உரிமை மட்டுமே உண்டு.. அடுத்து வரும் தலைமுறையிடம் இந்தப் புவிக்கோளை இன்னும் மேம்படுத்தப்பட்ட நிலையில் ஒப்படைத்துச் சென்றாக வேண்டும்' (பொருளாதார தத்துவக் குறிப்புகள் 1844) என முதலாளித்துவ சமூக அமைப்பின் வளர்ச்சி மற்றும் அதனால் நூறாண்டுகளுக்குப் பின் ஏற்படும் சூழலியல் சிக்கல்களை, அதன் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து கூறியவர் கார்ல் மார்க்ஸ்.
'சைபீரியச் சுரங்கங்களிலிருந்து கலிபோர்னியா வரை ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள எல்லாப் பகுதிகளையும் சேர்ந்த இலட்சக்கணக்கான புரட்சிகர சக தொழிலாளர்களின் அன்புக்கும் மரியாதைக்கும் பாத்திரமானவராய் அவர்களை ஆறாத் துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்துவிட்டார் மார்க்ஸ்' என்பதுடன், 'அவருக்கு எத்தனையோ எதிர்ப்பாளர்கள் இருக்கலாம்; ஆனால் அவரிடம் தனிப்பட்ட முறையில் பகைமை பாராட்டியவர் ஒருவர்கூட இருந்ததில்லை. அவருடைய பெயரும் பணியும் காலங்காலமாக நிலைத்து நிற்கும்' என்ற ஏங்கெல்சின் மேற்கோள் முக்கியத்துவம் கொண்டது. 1818ஆம் ஆண்டு பிறந்து, 1883இல் இயற்கையில் கலந்த மார்க்சை உலகின் பெரும்பான்மையான தொழிலாளர்கள் இன்றும் நினைவுகூறவும், கொண்டாடவும் செய்கின்றனர். அவருடைய தத்துவத்தை பின்பற்றுகின்றனர்.
- ஏ.சண்முகானந்தம் (உயிர் பதிப்பகம்)
Be the first to rate this book.