வரலாறு எழுதுவதில் சிறு வரலாறுகள் அதிக அழுத்தம் பெறுவது சமீபகாலமாக பெருகி வருகிறது. ஒரு சில பகுதிகளில் காணப்படும் வரலாறுகளின் சிறப்பின் காரணமாக சிறு வரலாறுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இத்தகைய சிறு வரலாறுகள் பெரு வரலாறுகளை சிறப்படை செய்கின்றன. பழங்கால ஆய்வுகள் குறித்த அரசக் குடும்பங்களின் வாரிசு வரலாறுகளில் வருகிறது. கி.பி. முதல் நூற்றாண்டியேலே ரோம் வணிகர்கள் தமிழகத்தில் பரவலான கடல் வணிகத்தில் ஈடுபட்டனர். பாண்டிச்சேரிக்கு அருகே உள்ள அரிக்கமேடு, கடலூருக்கு அருகே இருக்கும் காரைக்காடு. மகாபலிபுரம் அருகே பாலாற்று முகத்துவாரத்தில் இருக்கும் வசவசமுத்திரம். காவேரிபூம்பட்டினம் அருகே வெள்ளையன் குடியிருப்பு போன்ற இடங்களில் வர்த்தகம் பெருமளவில் நடந்து இருக்கின்றன என்பதை அகழாய்வுகள் வழி தெரிவிக்கின்றன.
வெள்ளாளூர். கருக்காகுறிச்சி, அழகன்குளம். திருக்கோவிலூர் போன்ற உள்நாட்டு இடங்களில் ரோமானியர்கள் வணிகம் நடைபெற்றது. காவேரிபூம்பட்டிணத்தில் சோழ மன்னர்களின் வர்த்தகப் பொருள்கள் சேமிகப்பட்டு இருந்தன. சங்க இலக்கியத்தில் இந்திய வணிகருக்கு தென்கிழக்கு நாடுகளில் இருந்த வணிகத் தொடர்புகளை குறிப்பிடுகின்றன. 6-ஆம் நூற்றாணாடில் நாகப்பட்டினத்திலிருந்து கேடாவிற்கு 40 நாட்களில் தென்னிந்திய கடல் வணிகர்கள் சென்றனர் என்று மிலிண்டா பன்ஷா, கிட்சிங் பயணக்குறிப்புகள் மூலம் தெரிகின்றன.
முனைவர் ஆ.துளசேந்திரன் அவர்கள் தமிழ் பல்கலைக்கழகத்தின் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையில் இணை பேராசிரியர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் (பொ) பணியாற்றி வருகிறார். பல்வேறு கல்வெட்டுகளையும் தொல்லியல் வரலாற்று சின்னணங்களையும் கண்டறிந்துள்ளார். மேலும் கல்வெட்டு, தொல்லியல், கலை வரலாற்று ஆய்வுகளில் தொடர்ந்து தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
மயிலாடும்பாறை, தாண்டிக்குடி, நாகப்பட்டினம், தமிழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளிலும் பங்கெடுத்துள்ளார். கல்வெட்டு, வரலாறு கோயிற்கலை, தொல்லியல், சமயம், அரசியல் தொடர்பான ஏழு ஆய்வு நூல்களையும், 50-க்கு மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளையும் வெளியிட்டிருக்கிறார். இவரது ஆய்வு நெறியில் 18 பேர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள். 60-க்கு மேற்பட்டோர் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றுள்ளார்கள்.
இவரது கல்வி மற்றும் ஆய்வுச் செயல்பாடுகளைப் பாராட்டும் வகையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதும், டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் விருதும் கிடைத்திருக்கிறது.
Be the first to rate this book.