விடுதலை அடைந்த காலம் தொடங்கி 2021 வரை தமிழ்நாடு, தன் கட்டமைப்பில் கண்ட சீரான, பரவலான வளர்ச்சிக்கு நிகராக வேறு ஒரு மாநிலம் ஏதேனும் உருவாகியிருக்கிறதா என்று பார்த்தால் இல்லை என்பதே உண்மை. நாட்டின் பொருளாதாரத் தலைநகரம் மும்பை மாநகரம் இருக்கும் மராட்டிய மாநிலம் கூட தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு ஒப்புமை கிடையாது என்பதே ஒன்றிய அரசின் பல்வேறு புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை. எப்படி இந்த வளர்ச்சியெல்லாம் சாத்தியமானது என்ற கேள்விக்குப் பெரும்பாலான இன்றைய தலைமுறையினர் சொல்லும் பதில் காமராஜர் என்பதே!
காமராஜரைப் பெருந்தலைவர் என்றும், கல்வி வளர்ச்சி தந்த வள்ளல் என்றும் போற்றும் நாம், அவரை எவ்வித வகையிலும் குறைத்து மதிப்பிட்டதில்லை என்றாலும் இந்த வளர்ச்சிக்கான ஒற்றை காரணகர்த்தாவாக அவர் மட்டுமே இருக்க முடியாது என்பதை அறிந்துணரும் அளவுக்கு அறிவும் படைத்தமையால் விளைந்த தேடலே இப்புத்தகம்.
Be the first to rate this book.