சைவ சமயத்திற்கு பன்னிரு திருமுறைகள் போன்று வைணவ சமயத்திற்கு நாலாயிரத்து திவ்விய பிரபந்தம் போன்று கௌமாரம் என்று அழைக்கப்படும் முருக வழிபாட்டுக்கு அடித்தளமான பக்தி நூல்களை, பாராயண நூல்களை உருவாக்கி அளித்தவர் அருணகிரிநாதப் பெருமான்.
திருப்புகழ், கந்தர் அந்தாதி, கந்தர் அலங்காரம், திருவகுப்பு, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுகூற்றிருக்கை, முதலிய பல நூல்களை முருகப் பெருமானுக்கு என்றென்றும் வாடாத பாமாலைகளாக அருணகிரிநாதர் சூட்டியுள்ளார்.அருணகிரியார் தன் இறுதி கவி மாலையாக கிளி உருவிலே முருகப் பெருமானை வழிபட்டுப் பாடிய ஐம்பத்தியொரு பாடல்களின் தொகுப்பே கந்தர் அனுபூதி.
Be the first to rate this book.