மதம் பிடித்து செப்பனிட்டு செய்த மொழிக்கு உயிரூட்டக் கருதுவோர் திட்டமிட்டு தமிழர் வரலாற்றைச் சிதைக்கவும், திரிக்கவும், மறைக்கவும் முயல்கின்றனர். தன்னலம் மிக்க, பொருள் வேட்கை கொண்ட ஒரு சில அரசியல் ஆதிக்கம் மிக்கோரும் வரலாற்றுச் சுவடுகளை அழிப்பதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இக்கருத்துகளை உள்ளடக்கி ஓர் ஆய்வாளருக்கு உரிய வகையில் பேரா. சி.கோ. அவர்களின் வரலாற்றைத் தேடித் தொகுத்துள்ளார் இலட்சுமி அம்மா. இதன் மூலம் அவருக்குப் புகழ் சேர்த்துள்ளார். களப்பணி, பெண்ணுரிமைப் போர் என்ற பார்வையோடு "தன் இன வரலாறு அறியாதவன் வரலாறு படைக்க இயலாது" என்பதற்கேற்ப, வரலாற்றுச் சுவடுகளை நோக்கி பார்வையைத் திருப்பியுள்ளார்.
வலிமிகுந்த வாழ்விலும் ஒளிதரும் தேடலில் தொடர்ந்து பணியாற்றுபவர் களப்பணியாளர், எளிய பெண்ணுரிமைப் போராளி, இனிய செயற்பாட்டாளர், இலட்சுமி அம்மா. வதைபட்டவரே வலி அறிவார்; துன்பம் அறிந்தவரே பிறர் துன்பம் உணர்வார் என்பதற்கேற்ப, தேடலில் ஏற்படும் தடைகள், துன்பம், இடர்பாடுகளை அறிந்த அண்ணி திரு. பெ.ம. இலக்குமி அவர்கள், கண்ணகியின் கால்தடம் அறிந்து நடந்து, கண்ணகி கோயிலைக் கண்டவர் பேரா. சி.கோ.வின் விழைவை, வேட்கையை, முயற்சியை உள்வாங்கி உணர்ந்து அவர் வரலாற்றைத் தேடி தொகுத்துத் தந்துள்ளார்கள்.
- புலவர் கரு. அரங்கராசன்.
Be the first to rate this book.