கனிந்த வாழ்வு
The wrapper image design and price printed on that are subject to change based on edition updates.

கனிந்த வாழ்வு

190 ₹200 (5% off)
+ ₹30 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
CommonFolks
Author: டாக்டர் என். பத்ரி
Publisher: Pen Bird Publication
Add to cart

Other Specifications

Language: தமிழ்
ISBN: 9789347711220
Published on: 2026
Book Format: Paperback

Description

முதுமைக்கு மன்னிக்கவும் மறக்கவும் தெரியும். ஒரு சாதாரண உரையாடலே பல மாதங்கள் அல்லது ஆண்டுகளாக இருந்த வெறுப்பைக் கரைத்துவிடும். அந்த வெறுப்பு அந்த மனிதரைப் பற்றியது அல்ல. அது நமது அகம்பாவம், மதிக்கப்படவில்லை என்ற பயம், பாதுகாப்பற்ற உணர்வு, அமைதியற்ற நிலையில் உருவான கற்பனை, உண்மை இல்லாத அளவுக்கு மீறிய சிந்தனை — இவற்றைப் பற்றியது ஆகும்.

இது சுமார் தொண்ணூறு சதவீத மக்களின் வாழ்வில் அன்றாடம் நிகழ்கிறது. மனிதர்களை வெறுப்பதற்குப் பதிலாக, மிகப் புத்திசாலித்தனமாக நமது மனத்தில் அவர்களைப் பற்றிய நேர்மறை உணர்வை அதிகரிக்க முயல வேண்டும். அவர்களுடன் நமக்கு நல்ல உறவு இருப்பதுபோல் கற்பனை செய்துகொள்ள வேண்டும். நமது மன அமைதிக்காக இதைச் செய்யும்போது, அவர் மீதான நமது வெறுப்பு மனத்தை விட்டு வெளியேறி விடுகிறது. அகம்பாவம் மறைந்து, பயம் குறைகிறது. அவரைப் பற்றிய கற்பனையும் நேர்மறையாக மாறி, நம் மனம் லேசாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை நம்மாலும் நண்பராலும் உணர முடிகிறது. நம் மன அமைதிக்கு மற்ற மனிதர்களை மாற்ற வேண்டிய அவசியமில்லை. நம் மனத்தில் அவர்களைப் பற்றிய அபிப்ராயங்களை மாற்றினாலே போதும்.

இன்றைய முதியோர்களும், நாளைய முதியோர்களும் இந்நூலைப் படித்துப் பயன்பெற வேண்டும் என்பதே என் விழைவு.

About the Author

டாக்டர் என். பத்ரி

நாற்பத்தெட்டு ஆண்டுகள் ஆசிரியப் பணியாற்றியவர். பணிவான ஆசிரியராகத் தனது பணியைத் தொடங்கிப் பல்கலைக்கழக அளவுவரை உயர்ந்தவர். இரண்டு முனைவர் பட்டங்களும் நான்கு முதுகலைப் பட்டங்களும் பெற்றவர். 1997-98 ஆம் ஆண்டில் NCERT விருதையும் பெற்றவர்.

தேசிய அளவிலான கல்வி ஆராய்ச்சிக் கருத்தரங்குகளில் கலந்து கொண்டு, பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவர் கல்வி சார்ந்து எழுதியுள்ள ஒன்பது புத்தகங்களை அமேசான் இணையத்தின் மூலம் பெற முடியும். அகில இந்திய வானொலியின் கல்வி ஒலிபரப்பில் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி ஊக்கப்படுத்தியவர். தமிழ்நாட்டின் பல்வேறு பல்கலைக்கழகங்களின் தொலைதூரக்கல்வியின் பி.எ மற்றும் எம்.எட் படிப்புகளுக்குப் பத்து வருடங்களுக்கு மேலாகக் கருத்தாளாராகப் பணியாற்றியுள்ளார். கல்வியியல் கல்லூரி ஒன்றில் முதல்வராகவும். ஆராய்ச்சி இயக்குநராகவும் ஐந்தாண்டுகள் பணியாற்றியுள்ளார்.

அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினரான இவர், பாரதியாரின் நூற்றாண்டு விழாவின் போது சிறந்த கவிஞராகப் புதுவை அரசினால் பட்டயம் அளிக்கப்பட்டவர். தினமணி, முதுமை எனும் பூங்காற்று. எல்டர்ஸ் தமிழ்நாடு முதியோர் சங்க மாத இதழ், கல்கி மற்றும் விகடகவி டிஜிடல் வார இதழ் போன்ற இதழ்களில் தொடர்ந்து எழுதிவருவதுடன் தொலைக்காட்சி, கல்வி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

Follow us for offers & updates

Ratings & Comments

Add Rating & Comment


 

Be the first to rate this book.

Refer a Friend
Free Shipping *
For orders above ₹500
Easy Payments
Multiple payment options
Customer Support
Mon-Sat(11am-7pm) (Message Only)
CommonFolks © 2017 - 2023
Designed & Developed by Dynamisigns

Login to CommonFolks

Welcome back!


 

Don't have an account? Register

Forgot your password? Reset Password

Register with us

To manage & track your orders.

By clicking the "Register" button, you agree to the Terms & Conditions.


 

Already have an account? Login

Forgot your password? Reset Password

Reset your password

Get a new one.


 

Already have an account? Login

Don't have an account? Register

Bank Account Details

Loading...
Whatsapp